< Back
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசிபலன் - 20.07.2024
இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் - 20.07.2024

தினத்தந்தி
|
20 July 2024 6:57 AM IST

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆடி மாதம் 4ம்- தேதி சனிக்கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 3.05 வரை மூலம் பின்பு பூராடம்.

திதி : இன்று மாலை 06.09 வரை சதுர்த்தசி பின்பு பவுர்ணமி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 07.45 - 08.45

நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45

ராகு காலம் காலை : 9.00 - 10.30

எமகண்டம் மாலை : 1.30 - 3.00

குளிகை காலை : 6.00 - 7.30

கவுரி நல்ல நேரம் காலை : 10.45 - 11.45

கவுரி நல்ல நேரம் மாலை : 9.30 - 10.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : கிருத்திகை

இன்றைய ராசிபலன்

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அந்த வேலைகளை பகுதி பகுதியாக பிரித்துக் கொண்டு செய்து முடித்துவிடுவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர். உடல் நலம் மேம்படும். தம்பதிகளிடையே இருந்து வந்த பிணக்குகள் மறையும். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

ரிஷபம்

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் மட்டும் சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மிதுனம்

இன்று தாங்கள் நினைத்ததற்கு மேலாகவே பணம் வரக்கூடிய தினமாக இருக்கும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். வியாபாரத்தில் போட்டியை வெல்வீர்கள். பூர்வபுண்ய ஸ்தானம் சிறப்பாக உள்ளதால் சொத்தில் உள்ள வில்லங்கம் நீங்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகி அதிக மதிப்பெண்களை பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கடகம்

கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு தங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். அரசியல்வாதிகள் நாவடக்கமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பேச்சினால் விளைவுகளை சந்திப்பீர்கள். பொறுமை அவசியம். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

சிம்மம்

குடும்பத் தலைவிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். முன்பிருந்ததை விட ஆரோக்கியம் மேம்படும். வாகனம் பழுதடையும், அதை சரி செய்வீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். வியாபாரிகளுக்கு நல்ல விற்பனை உண்டு. எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கன்னி

அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எங்கு சென்றாலும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கும்.தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். பிள்ளைகள் சொல்படி நடப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை

துலாம்

மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றால் இன்னும் முயற்சி தேவை. ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள் வயிறு உபாதை இருக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும். காதலர்கள் தங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் : கடல் நீலம்

விருச்சிகம்

நட்பு பலப்படும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். விரும்பிய பொருள் வாங்குவீர்கள். வியாபாரிகள் கிளைகளை துவங்க திட்டமிடுவார்கள். தம்பதிகளின் கருத்து ஒற்றுமை ஓங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

கலைப் பொருட்கள் மீது ஆர்வம் கூடி அதற்கு செலவு செய்வீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுபகாரியம் கைகூடும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மாணவர்களின் முயற்சிகள் பலிதமாகும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மகரம்

பெண்களுக்கு பிடித்த விசயங்கள் நடக்கும் நாள். தந்தைவழி சொத்து கைக்கு வரும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். கணினித் துறையில் உள்ளவர்களுக்கு புதிய ப்ராஜக்ட் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கும்பம்

மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். படிப்பில் நன்கு ஆர்வம் பிறக்கும். அரைகுரையாக முடிக்க முடியாத வீடு கட்டும் பணி மீண்டும் துவங்கும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மீனம்

சொத்து வாங்குவது, விற்பது போன்ற நிலம் வீடு சம்பந்தப்பட்டவைகளில் லாபமாக முடியும். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் டிஜிட்டல் மார்கெட்டிங் அவசியம். பிள்ளை இல்லாதவர்களுக்கு இயற்கை வைத்தியத்தால் நன்மை உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு




மேலும் செய்திகள்