< Back
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசிபலன் - 19.07.2024
இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் - 19.07.2024

தினத்தந்தி
|
19 July 2024 7:13 AM IST

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆடி மாதம் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 2.54 வரை கேட்டை பின்பு மூலம்

திதி : இன்று மாலை 07.01 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

யோகம் : சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை : 9.00 - 10.00

நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45

ராகு காலம் காலை : 10.30 - 12.00

எமகண்டம் மாலை : 3.00 - 4.30

குளிகை காலை : 7.30 - 09.00

கௌரி நல்ல நேரம் காலை : 12.15 - 01.15

கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : பரணி

இன்றைய ராசிபலன்:

மேஷம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

ரிஷபம்

வாடிக்கையாளர்களிடம் வாய் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள்வது நல்லது. முன்கோபத்தை அவர்களிடம் காட்ட வேண்டாம். அரசாங்க வேலைகள் தங்களுக்கு சாதகமாக அமையும். வியாபாரிகள் கடின உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மிதுனம்

எதிர்பார்த்த சில முக்கியமான காரியங்கள் நிறைவேறும். வியாபாரிகளிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பொறுமை அவசியம். கல்வி சம்பந்தப்பட்ட காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தம்பதிகளிடையே அன்பு குறையாது. தெரியாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

கடகம்

மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் அவை குறையும். அத்தியாவசிய தேவைகளை மட்டும் பூர்த்திச் செய்து கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அளவாக நடந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்

தங்கள் துணையால் உதவி உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். உடல் உஷ்ணமாகும். நீர் மோர், இளநீர் என அருந்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. பிள்ளைகள் படிப்பதில் தாங்கள் அவர்களை கண்காணிப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கன்னி

பணியாளர்களின் நேர்மையைக் கண்டு நிர்வாகம் உயர் பதவியைத் தரும். உறவினரிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் நல்ல செய்தியுடன் வருவர். காதலர்கள் திருமணத்துக்கு தயாராவர்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

துலாம்

மனதில் தன்னம்பிக்கையும், உடலில் உற்சாகமும் மிகுந்த நாளாக இருக்கும். முக்கியமாக கொடுக்க வேண்டிய கடனை அடைத்து இன்புறுவீர்கள். மாணவர்கள் திட்டமிட்டு படிப்பர். திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

விருச்சிகம்

தாங்கள் நண்பர்களிடம் கடனாக கொடுத்து வைத்த பணம் இன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் கொஞ்சம் கவனமாக பேசுவது நல்லது இல்லை என்றால் தேவையற்ற பிரச்சினைகளில் இழுத்துவிடுவார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

கலைஞர்களுக்கு புதிய பட ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலர் வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். செய்யும் தொழிலில் செழிப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாக பொறுப்புகள் கூடும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : தங்கநிறம்

மகரம்

நீண்ட நாட்களாக தடைபட்ட காரியம் முடியும். உறவினர்கள் வருகை மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. மனைவிக்கு தாங்கள் நினைத்தவாறே நல்ல தொழிலை அமைத்துத் தருவீர்கள். திருமணமானவர்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கும்பம்

கலைஞர்களின் நீண்ட கால கனவு நனவாகும். பெண்கள் அறிமுகம் இல்லாத வெளி நபர்களிடம் பழகும்போது கவனமுடன் இருப்பது தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். தம்பதிகளிடையே சண்டை வராமல் தடுக்க அமைதியை காப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

மீனம்

வங்கியில் இருந்து தாங்கள் கேட்ட தொகை கைக்கு கிடைக்கும். இடம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணம் நாலாபக்கமிருந்தும் வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மேலும் செய்திகள்