< Back
இன்றைய பலன்
இன்றைய ராசிபலன் - 13.06.2024
இன்றைய பலன்

இன்றைய ராசிபலன் - 13.06.2024

தினத்தந்தி
|
13 Jun 2024 12:50 AM GMT

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் வைகாசி மாதம் 31-ம் தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.51 வரை மகம், பின்பு பூரம்

திதி : இன்று இரவு 10.44 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 10.30 - 11.30

ராகு காலம் பிற்பகல் : 1.30 - 3.00

எமகண்டம் காலை : 6.00 - 7.30

குளிகை காலை : 9.00 - 10.30

கௌரி நல்ல நேரம் காலை : 11.30 - 12.00

கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30

சூலம் : தெற்கு

சந்திராஷ்டமம் : உத்திராடம்

ராசி பலன்

மேஷம்

பெண்கள் தங்கள் வீட்டினை அழகு படுத்தி மகிழ்வீர்கள்.உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிம்மதி உண்டு. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

ரிஷபம்

தங்கள் பிள்ளை அயல்நாடு செல்வார். பணவரவு நன்றாக இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்டநிறம் : கருநீலம்

மிதுனம்

கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். கணவன், மனைவி ஒற்றுமையாக இருப்பர். வியாபாரம் செழிப்புறும். குடும்பத் தலைவிகள் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்குவர். அரசு டென்டர் போன்றவைகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவர்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

கடகம்

பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. அழகு நிலையங்கள் ஆரம்பிக்க திட்டமிடுவீர்கள். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பெண்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவர். உடல் நலம் சிறக்கும். மார்கெட்டிங் பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

சிம்மம்

கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உடல் நலம் தேறும். நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.இருப்பினும் வேலையை குறித்த நேரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

கன்னி

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை நம்புங்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பற்று வரவு வசூலாகும். உடல் நலனில் கவனம் வேண்டும். நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வெளி உணவுகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

துலாம்

தந்தைவழி சொத்து கைக்கு வரும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் கலந்து கொண்டு முதல் மரியாதையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும்.வரவேண்டிய பணம் இன்று வசூலாகும்.

அதிர்ஷ்டநிறம் : கருநீலம்

விருச்சிகம்

நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். தொழிலதிபர்களிடமிருந்து வேலையாட்கள் தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். வேலையில் தங்கள் கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

தனுசு

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் பாராட்டும் சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி மற்றும் மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் நீங்கும். தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர்.

அதிர்ஷ்டநிறம் : கிளிப்பச்சை

மகரம்

இன்று உத்திராடம் நட்சத்திரகாரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்டநிறம் : வான் நீலம்

கும்பம்

உத்யோகஸ்தர்கள் மேலிடத்தினரிடம் பகைத்துக் கொள்ளாதீர்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

மீனம்

வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புதிய வகையில் தங்கள் வியாபாரத்தை பெருக்குவீர்கள். பல கிளைகள் துவங்க திட்டமிடுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிரிகள் சரணடைவர். பங்குச் சந்தையில் சற்று கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

மேலும் செய்திகள்