< Back
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசிபலன் - 01.08.2024
இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் - 01.08.2024

தினத்தந்தி
|
1 Aug 2024 6:41 AM IST

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆடி மாதம் 16ம்- தேதி வியாழக் கிழமை

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 12.47 வரை மிருகசீரிடம் பின்பு திருவாதிரை

திதி : இன்று மாலை 05.17 வரை துவாதசி பின்பு திரயோதசி

யோகம் : சித்த, மரண யோகம்

நல்ல நேரம் மாலை : 10.45 - 11.45

ராகு காலம் பிற்பகல் : 1.30 - 3.00

எமகண்டம் காலை : 6.00 - 7.30

குளிகை காலை : 9.00 - 10.30

கௌரி நல்ல நேரம் காலை : 12.15 - 1.15

கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30

சூலம் : தெற்கு

சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி

இன்றைய ராசிபலன்:

மேஷம்

தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் கீழ்படிந்து நடப்பர்.. அரசு சம்பந்தப்பட்ட ஒப்பந்த வேலைகளில் தங்களுக்கே வெற்றி நிச்சயம். நட்பு வட்டம் விரிவடையும். உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. குலதெய்வக் கோயிலுக்கு நன்கொடை வசூலிப்பீர்கள். தியானம் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

ரிஷபம்

மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

மிதுனம்

உங்கள் பிள்ளைகள் விளையாட்டுப் போட்டியில் பரிசு பெற்று உங்களுக்கு பெருமையைத் தேடித்தருவர். உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை மேற்கொண்டு அதிக லாபத்தை அடைவர்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

கடகம்

வேலை தேடுபவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். வியாபாரிகளிடம் வியாபார யுக்திகளை கற்றுக் கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உற்சாகமான தினமாக இன்று அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். பிள்ளைகள் பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்து கொள்வர். தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கன்னி

வீட்டில் உள்ள வேலையாட்களிடம் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. பொது நல சேவையில் உள்ளவர்கள் தாங்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். மாணவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும். இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

இன்று விசாகம், நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம். ஆனால், சித்திரை, சுவாதி நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

விருச்சிகம்

பெற்றோரின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்களின் ஆலோசனையை பரிசீளித்துப் பாருங்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட ஊழியர்களுக்கு தகுந்த பாடம் இன்று கிடைக்கும். மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

தனுசு

பணவரவு அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களுடன் மீண்டும் இணைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து செயல்படுவர்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

மகரம்

உடல் நலத்தில் அக்கறை அவசியம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கும்பம்

டைலரிங் மற்றும் அழகுக்கலை தொழிலில் முன்னேற்றம் காண்பர். பெற்றோரின் உடல் நிலையில் கவனம் தேவை. நிலுவையிலிருந்த வழக்கு தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொலை தூர பயணம் உண்டு. அந்த பயணங்களால் லாபம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : கடல் நீலம்

மீனம்

உடன் பிறந்தவர்கள் உதவுவர். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடல் பலம் பெறும். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மேலும் செய்திகள்