< Back
இன்றைய பலன்
இன்றைய ராசிபலன் - 16.06.2024
இன்றைய பலன்

இன்றைய ராசிபலன் - 16.06.2024

தினத்தந்தி
|
16 Jun 2024 12:57 AM GMT

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆனி மாதம் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 11.29 வரை அஸ்தம் பின்பு சித்திரை

திதி : இன்று அதிகாலை 02.41 வரை நவமி பின்பு தசமி சதுர்த்தி

யோகம் : அமிர்த, சித்தயோகம்

நல்ல நேரம் காலை : 07.30 - 08.30

நல்ல நேரம் மாலை : 03.30 - 04.30

ராகு காலம் மாலை : 04.30 - 6.00

எமகண்டம் பிற்பகல் : 12.00 - 1.30

குளிகை மாலை : 03.00 - 4.30

கௌரி நல்ல நேரம் காலை : 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் பிற்பகல் : 01.30 - 02.30

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர் புதுப்புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்

அதிர்ஷ்டநிறம் : சாம்பல் நிறம்

ரிஷபம்

உடன் பிறந்தவர்கள் உதவுவர். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். பிள்ளைகள் பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்து கொள்வர். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடல்பலம்பெறும்.

அதிர்ஷ்டநிறம் : கருநீலம்

மிதுனம்

அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது வாய் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது

அதிர்ஷ்டநிறம் : ஆரஞ்ச்

கடகம்

வியாபாரிகளிடம் வியாபார யுக்திகளை கற்றுக்கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக்கோயிலுக்கு நன்கொடை வசூலிப்பீர்கள். தியானம் மேற்கொள்வீர்கள். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் கீழ்படிந்து நடப்பர். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும்

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

சிம்மம்

உற்சாகமான தினமாக இன்று அமையும். வேலை தேடுபவர்கள் போட்டித்தேர்வுகள் மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட ஒப்பந்த வேலைகளில் தங்களுக்கே வெற்றி நிச்சயம். நட்பு வட்டம் விரிவடையும்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

கன்னி

பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் நன்மை உண்டு. பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். அரசியல்வாதிகளுக்கு புகழ், கவுரவம் உயரும். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

துலாம்

நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். உத்யோகஸ்தர்களுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும். பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து செயல்படுவர். மனைவிவழி உறவினர்களுடன் மீண்டும் இணைவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

விருச்சிகம்

உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட ஊழியர்களுக்கு தகுந்த பாடம் இன்று கிடைக்கும். மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். உங்கள் பிள்ளைகள் விளையாட்டுப் போட்டியில் பரிசு பெற்று உங்களுக்கு பெருமையைத் தேடித்தருவர்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

தனுசு

உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர். பெற்றோரின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்களின் ஆலோசனையை பரிசீளித்துப் பாருங்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை மேற்கொண்டுஅதிக லாபத்தை அடைவர்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

மகரம்

மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். மாணவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும். இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

கும்பம்

இன்று சில கசப்பான அனுபவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தின் போதும் சிறு சிறு விபத்துகளை தவிர்க்க கூடுமான வரை பயணத்தை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : கடல்நீலம்

மீனம்

சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல்நலத்தில் அக்கறை அவசியம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் வேலையாட்களின் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

மேலும் செய்திகள்