< Back
இன்றைய பலன்
இன்றைய ராசிபலன் - 15.06.2024
இன்றைய பலன்

இன்றைய ராசிபலன் - 15.06.2024

தினத்தந்தி
|
15 Jun 2024 12:58 AM GMT

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆனி மாதம் 1-ம் தேதி சனிக்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 08.56 வரை உத்திரம் பின்பு அஸ்தம்.

திதி : இன்று அதிகாலை 12.46 வரை அஷ்டமி பின்பு நவமி

யோகம் : மரணயோகம்

நல்ல நேரம் காலை : 07.30 - 08.30

நல்ல நேரம் மாலை : 04.30 - 05.30

ராகு காலம் காலை : 9.00 - 10.30

எமகண்டம் பிற்பகல் : 1.30 - 3.00

குளிகை காலை : 6.00 - 7.30

கௌரி நல்ல நேரம் காலை : 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை : 09.30 - 10.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : அவிட்டம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

இதுவரை சொந்தபந்தங்கள் மத்தியில் மனக்கசப்பையும், அவமானத்தையும் தாங்கி கொண்டிருந்த நீங்கள் தற்போது அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். இனி உங்கள் அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்வார்கள்.

அதிர்ஷ்டநிறம் : ஆரஞ்ச்

ரிஷபம்

கலைஞர்களுக்கு உற்சாகம் கூடும் நாள். பெரிய பேனர்களிலிருந்து அழைப்பு வரும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. உயர் பதவியும் கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகமிருந்து பிள்ளைச்செல்வம் இல்லாத குறை உங்களை பெரிதும்பாதித்ததே, இனி கவலை வேண்டாம் அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும்.

அதிர்ஷ்டநிறம் : கிரே

மிதுனம்

கட்சித்தலைமையுடனான மோதல்கள் விலகும். புகழ்பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும். ,சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வருமானம் உயரும். ஆனால், பல்வலி வந்து போகும். தொண்டை புகைச்சல் அதிகமாகும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

கடகம்

குடும்பத்தில் நீண்ட நாட்களாக நினைத்த நல்ல காரியம் நடக்கும். உறவுகாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்வார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மனைவி வழியில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

சிம்மம்

நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அவருக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். பழைய பிரச்சினைகளை தீர்க்க வழிவகை பிறக்கும். பங்கு தாரராக இருந்தால் லாபம் அதிகம் பெறுவீர்கள்

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

கன்னி

தடைபட்டிருந்த சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் இனி நீங்கும் என்றாலும் வீண்சந்தேகத்தாலும், ஈகோ பிரச்சினையாலும் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே, பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : கருநீலம்

துலாம்

வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கூடி வரும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

விருச்சிகம்

உத்யோகம் முன்பை விட சாதகமாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பழைய கடன்கள் அடைபடும். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். அலுவலகத்தில் விடுபட்ட நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம் : கடல்நீலம்

தனுசு

பயணங்களின் போது மற்ற சிந்தனைகளை ஒதுக்குவது நல்லது. அரசு தொடர்பான காரியங்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புதுவேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். கவுரவப் பதவி தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

மகரம்

இன்று அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

கும்பம்

இன்று வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள். மார்கெட்டிங் பிரிவினர் புதுப்புது ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவை. வேலை தேடுபர்களுக்கு புதிய உத்யோகம் கிடைக்கும். மளிகைக்கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். தொழில் ரகசியங்கள் வெளியில் கசியாமல் பார்த்துக்கொள்வது நல்லது. விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும். ஷேர் மூலமாக பணம் வரும். உடல்நலம் சீராகும்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

மீனம்

வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். தொலைக்காட்சி வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பெண்கள் நகை விலை உயர்ந்தப்பொருட்கள் வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

மேலும் செய்திகள்