< Back
இன்றைய பலன்
இன்றைய ராசிபலன் - 10.07.2024
இன்றைய பலன்

இன்றைய ராசிபலன் - 10.07.2024

தினத்தந்தி
|
10 July 2024 1:04 AM GMT

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆனிமாதம் 26-ம் தேதி புதன்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 11.20 வரை மகம் பின்பு பூரம்

திதி : இன்று காலை 8.31 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி

யோகம் : சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை : 9.15 - 10.15

நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45

ராகு காலம் மாலை : 12.00 - 1.30

எமகண்டம் காலை : 7.30 - 9.00

குளிகை காலை : 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30

சூலம் : வடக்கு

சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்

மேஷம்

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதியான போக்கே நிலவும். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் கனவு நனவாகும். அத்தியாவசிய தேவை நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

ரிஷபம்

குடும்பத்தில் வெளிநபரின் தலையீடு வேண்டாம். வியாபாரத்தில் தங்கள் மனைவி ஒத்துழைப்பார். பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். வீட்டினை அழகாக கட்டிமுடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மிதுனம்

தாமதமான சுபகாரியம் நடந்தேறும். பணம் தாராளமாக வரும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வது நல்லது. உடல் நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கிரே

கடகம்

திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பிடித்த வரன் அமையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்

ஆரோக்கியம் மேம்படும். பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு தங்களின் திருமண கனவு நிறைவேறும்.

வாகனம் புதிதாக வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாப்பக்கம் வரும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும் . மனைவி வழியில் உதவிகள் உண்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

துலாம்

தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும்.வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் வேலை பளு குறையும். பெண்களின் சேமிப்பு உயரும். கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். திடீர் பணவரவு உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை

விருச்சிகம்

தம்பதிகளிடத்தில் நல்ல புரிதல் உண்டாகும். மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது. விரும்பியவரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். உடல் நலம் பலம் பெறும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

மூலம் மற்றும் பூராடம் நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இன்று உத்ராடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்து விதமான காரியங்களை துவங்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மகரம்

தேக ஆரோக்கியம் பளிச்சிடும். உறவினர்களால் நன்மை உண்டாகும். பொதுத் துறையில் இருப்பவருக்கு தங்கள் சொல்லிற்கு மதிப்புக் கூடும். வியாபாரத்திற்கு வங்கிக்கடன் கிடைக்கும். ஆன்மீகப் பணிகள் சிறக்கும். காசி, கயா என தீர்க்க யாத்திரை செல்வதற்கு திட்டமிடுவர்.

அதிர்ஷ்ட நிறம் : கிரே

கும்பம்

கையிருப்பு அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மீனம்

வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். மருத்துவ செலவு உண்டு. உறவினர் உதவுவர். உத்யோகஸ்தர்ளுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மேலும் செய்திகள்