< Back
தொழில்நுட்பம்
ஜெப்ரானிக்ஸ் ராக்ஸர் ஸ்பீக்கர்
தொழில்நுட்பம்

ஜெப்ரானிக்ஸ் ராக்ஸர் ஸ்பீக்கர்

தினத்தந்தி
|
2 Aug 2023 12:18 PM IST

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் 100 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கரை ராக்ஸர் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. ஆர்.ஜி.பி. விளக்கொளி 5 விதமான நிலைகளில் கண்கவர் வண்ண ஒளியையும், டால்பி ஆடியோ ரம்மியமான இசையையும் வெளிப்படுத்தும். மைக்ரோபோனை இணைத்து பேசவும், கிடாரை இணைத்து இசைக்கவும் முடியும்.

இதில் போன் மற்றும் டேப்லெட்டை வைப்பதற்கான ஹோல்டர், ரிமோட் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் இருப்பது கூடுதல் சிறப்பாகும். இதில் ரீ சார்ஜபிள் பேட்டரி உள்ளதால் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 5 மணி நேரம் வரை செயல்படும். இதன் விலை சுமார் ரூ.16,999.

மேலும் செய்திகள்