< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்ட்
|26 Oct 2023 3:48 PM IST
ரேஜர் நிறுவனம் ஆர்க் 950 என்ற பெயரிலான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டை அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள், சாம்சங், கூகுள் மின்னணு சாதனங்களை இதில் சார்ஜ் செய்யலாம். ஒரே சமயத்தில் மூன்று கருவிகளை சார்ஜ் செய்யும் வசதி இதில் உள்ளது. அதாவது ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் கடிகாரம், பவர் பேங்க் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்யலாம். இதில் 5 வாட் முதல் 15 வாட் வரையிலான மின்சாரம் சப்ளையாகும்.
இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு திறன், மின்சாரம் சீராக விநியோகம் ஆவதை உறுதி செய்கிறது. இதனால் உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு மின்னணு சாதனங்கள் பழுதாகும் வாய்ப்பு இல்லை. அலுமினியம் மேல் பாகத்தைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.2,249.