< Back
தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்
மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த டுவிட்டர்... மீம்ஸ்களை தெறிக்க விட்ட டுவிட்டர்வாசிகள்

1 July 2023 9:15 PM IST
உலகம் முழுவதும் டுவிட்டர் முடங்கிய நிலையில் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது.
டெல்லி,
உலகின் மிகப்பெரிய சமூகவலைதளம் டுவிட்டர். இந்த சமூகவலைதளத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர்.
இதனிடையே, உலகின் பல்வேறு நாடுகளில் டுவிட்டர் முடங்கியது. 1 மணி நேரத்திற்கு மேல் டுவிட்டர் முடங்கியது. இதனால் டுவிட்டர்வாசிகள் டுவிட் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், முடங்கியிருந்த டுவிட்டர் தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. டுவிட்டர் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் மீம்ஸ்களை டுவிட்டரில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
டுவிட்டர் முடங்கியதை கேளி செய்து டுவிட்டர்வாசிகள் மீம்ஸ்களை பறக்க விட்டுள்ளனர். இவை டுவிட்டரில் தற்போது வைரலாகி வருகிறது.