< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
சாம்சங் கேமிங் மானிட்டர்
|13 July 2023 11:17 AM IST
சாம்சங் நிறுவனம் புதிய தலைமுறை கேமிங் மானிட்டரை ஒடிஸி ஓலெட் ஜி 9 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் நியோ குவாண்டம் பிராசஸர் புரோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளதால் காட்சிகளைத் துல்லியமாகவும், தரமாகவும் வெளிப்படுத்தும். 49 அங்குல அளவில் ஓலெட் திரையுடன் வந்துள்ள முதல் கேமிங் மானிட்டர் இதுவாகும். உள்ளீடாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.1,99,999.