< Back
தொழில்நுட்பம்
ஆடோம்பெர்க் ஸ்மார்ட் 2.0 மின்விசிறி
தொழில்நுட்பம்

ஆடோம்பெர்க் ஸ்மார்ட் 2.0 மின்விசிறி

தினத்தந்தி
|
13 July 2023 11:28 AM IST

வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னணியில் திகழும் ஆடோம்பெர்க் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் 2.0 என்ற பெயரிலான மேற்கூரை (சீலிங்) மின்விசிறிகளை ஏரிஸ், ஏரிஸ் ஸ்டார்லைட், ஸ்டூடியோ ஸ்மார்ட், ரெனிஸா ஸ்மார்ட் ஆகிய நான்கு மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் வகையிலும் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய தாக இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரிமோட், குரல்வழிக் கட்டுப்பாட்டில் இயங்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான மின்விசிறிகளைப்போல் அல்லாமல் எவ்வளவு நேரம் இயங்கினால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்ற விவரத்தை இது அளிக்கிறது. அலெக்ஸா, கூகுள் ஹோம் போன்றவற்றின் மூலமும் இதை செயல்படுத்தலாம். அழகிய வண்ணங்களில் இவை வந்துள்ளன. ஏரிஸ் மாடல் விலை சுமார் ரூ.7,999. ஏரிஸ் ஸ்டார்லைட் மாடல் விலை சுமார் ரூ.8,350. ஸ்டூடியோ ஸ்மார்ட் மாடல் விலை சுமார் ரூ.5,790. ரெனிஸா ஸ்மார்ட் மாடல் விலை சுமார் ரூ.4,990.

மேலும் செய்திகள்