< Back
தொழில்நுட்பம்
ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் ஸ்மார்ட் கடிகாரம்
தொழில்நுட்பம்

ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் ஸ்மார்ட் கடிகாரம்

தினத்தந்தி
|
28 May 2023 11:43 AM IST

போட் நிறுவனம் புதிதாக ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,799. இது 1.91 அங்குல ஹெச்.டி. திரை, புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் உள்ளது.

இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைத் துல்லியமாகக் காட்டும். இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 10 நாட்கள் வரை செயல்படும். குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இதை செயல்படுத்தலாம். கருப்பு, கிரே, நீலம், மெரூன் ஆகிய கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கும்.

மேலும் செய்திகள்