< Back
தொழில்நுட்பம்
சோனி வயர்லெஸ் இயர்போன்
தொழில்நுட்பம்

சோனி வயர்லெஸ் இயர்போன்

தினத்தந்தி
|
28 May 2023 12:40 PM IST

சோனி நிறுவனம் புதிதாக டபிள்யூ.எப். எல்.எஸ் 900.என். என்ற பெயரில் நீலநிற வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. சுற்றுச் சூழலைக் காக்கும் நோக்கில் உபயோகப்படுத்தப் பட்ட குடிநீர் பெட் பாட்டில்களை உருக்கி அதிலிருந்து இதன் மேல்பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம், புளூடூத் 5.2 இணைப்பு வசதி கொண்டது.

இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 6 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. சார்ஜிங் கேசில் 20 மணி நேரம் செயல்படுவதற்குத் தேவையான மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரி உள்ளது. இதன் விலை சுமார் ரூ.16,859.

மேலும் செய்திகள்