< Back
தொழில்நுட்பம்
சோனி பிராவியா 4-கே ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்
தொழில்நுட்பம்

சோனி பிராவியா 4-கே ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்

தினத்தந்தி
|
5 July 2023 12:51 PM IST

சோனி நிறுவனம் புதிதாக பிராவியா சீரிஸில் எக்ஸ்.ஆர். எஸ் 90. எல். என்ற புதிய மாடல் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 55 அங்குலம், 65 அங்குலம் மற்றும் 75 அங்குல அளவுகளில் 4-கே ரெசல்யூஷனைக் கொண்டவையாக வந்துள்ளன. இவற்றில் காக்னிடிவ் பிராசஸர் உள்ளது. ஒலி, ஒளி அளவு, கலர் உள்ளிட்ட அனைத்துமே தானியங்கி முறையில் செயற்கை நுட்பத்தைக் கொண்டு சிறப்பாக செயல்படும். இந்த டி.வி.யுடன் வீடியோ கேம் கன்சோலை இணைத்து வீடியோ கேம்களை விளையாட முடியும். இது குரல் வழி கட்டுப்பாட்டில் செயல்படும் திறன் கொண்டது.

தற்போது 55 அங்குலம், 65 அங்குலம் மாடல்கள் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. 75 அங்குல மாடலின் விலை விரைவில் வெளியிடப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

55 அங்குல டி.வி.யின் விலை சுமார் ரூ.1,39,990.

65 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.1,79,990.

மேலும் செய்திகள்