< Back
தொழில்நுட்பம்
மகளிருக்கான ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்
தொழில்நுட்பம்

மகளிருக்கான ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்

தினத்தந்தி
|
26 July 2023 1:57 PM IST

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் நாய்ஸ் நிறுவனம் மகளிருக்கென சிறிய வடிவிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. நாய்ஸ் பிட் டிவா என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த கடிகாரம் 1.1 அங்குல அளவிலான வட்ட வடிவிலான டயலைக் கொண்டுள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. வைரம் பட்டை தீட்டப்பட்டதைப் போன்று இதன் மேல் பகுதி பட்டை பட்டையாக பார்ப்பதற்கே அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டாலும் அதனால் உடலில் எரிக்கப்படும் கலோரியின் அளவை துல்லியமாகக் காட்டும்.

இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 4 நாட்கள் வரை செயல்படும். இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தூக்கக் குறைபாடு, மன அழுத்தம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட விவரங்களை துல்லியமாகப் பதிவு செய்து அறிவுறுத்தும். குரல் வழிக் கட்டுப்பாட்டிலும் செயல்படும். இதன் விலை சுமார் ரூ 2,999.

மேலும் செய்திகள்