< Back
தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 9
தொழில்நுட்பம்

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 9

தினத்தந்தி
|
26 Oct 2023 3:35 PM IST

சாம்சங் நிறுவனம் புதிதாக இரண்டு மாடல் டேப்லெட்களை (கேலக்ஸி டேப் ஏ 9, ஏ 9 பிளஸ்) அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை சுமார் ரூ.12,999 முதல் ஆரம்பமாகிறது. ஏ 9 மாடலில் 8.7 அங்குல திரை, மீடியாடெக் ஹீலியோ ஜி 99 பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம் இரண்டு ஸ்பீக்கரைக் கொண்டவை. பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமரா, நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5,100 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏ 9 பிளஸ் மாடலில் பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 2 மெகா பிக்ஸெல் கேமரா, 7,040 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, குவால்காம் ஸ்நாப்டிராகன் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 2 சிம் கார்டு போடும் வசதியும் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் கொண்டது.

பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.22,999.

மேலும் செய்திகள்