< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
சாம்சங் கிறிஸ்டல் விஷன் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்
|16 Aug 2023 4:50 PM IST
சாம்சங் கிறிஸ்டல் விஷன் ஸ்மார்ட் டி.வி.மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சாம்சங் நிறுவனம் கிறிஸ்டல் விஷன் 4-கே ரெசல்யூஷனைக் கொண்ட ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 43 அங்குலம், 55 அங்குலம் மற்றும் 65 அங்குல அளவுகளில் கிடைக்கும். மூன்று பக்கங்களில் பிரேம் இல்லாத வகையில் முழுவதும் திரையைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் கிறிஸ்டல் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. டைஸன் ஸ்மார்ட் டி.வி, இயங்குதளம் கொண்டது. பன்முக குரல் வழிக் கட்டுப்பாடு, ஸ்லிம்பிட் கேமரா வசதி, சோலார் ரிமோட், ஐ.ஓ.டி. சென்சார் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். அலெக்ஸா, கூகுள் மற்றும் பிக்ஸ்பி உள்ளிட்ட குரல்வழி கட்டுப்பாட்டு மூலம் இதை செயல்படுத்தலாம்.
43 அங்குல டி.வி. விலை ரூ. 31,490. 55 அங்குல டி.வி. விலை ரூ. 46,990
65 அங்குல டி.வி. விலை ரூ. 71,990.