< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
பிலிப்ஸ் ஏர் பிரையர்
|8 Jun 2023 9:12 PM IST
சமையலறை மின் சாதனங்களை உற்பத்தி செய்யும் பிலிப்ஸ் நிறுவனம் புதிய ஏர் பிரையரை அறிமுகம் செய்துள்ளது.
14 விதமான பொறிக்கும் பணிகளை இந்த ஒரே பிரையர் செய்து விடும். பொறிப்பதை பார்க்க வசதியாக கண்ணாடி ஜன்னல் மற்றும் டிஜிட்டல் திரை உள்ளது.
எண்ணெய் இன்றி உணவுப் பொருட்களை பொறித்து சாப்பிட ஏற்றது. இதனால் எண்ணெய் உணவு வகைகளை தவிர்ப்போரும் இதில் பொறித்த வறுவல்களை சாப்பிடலாம். முன்கூட்டியே உணவுப் பொருட்களை வறுப்பதற்கு தேவையான வரையறைகளை7 பொருட்கள் வரை இதில் நிர்ணயிக்கும் வசதி உள்ளது.
நியூட்ரி ஆப் எனப்படும் செயலியை பதிவிறக்கம் செய்து சமையல் குறிப்புகளை தெரிந்து பயன்படுத்தும் வசதியும் உள்ளது. பொறிக்க, பேக் செய்ய, கிரில் செய்ய, ரோஸ்ட் செய்ய, மீண்டும் சூடுபடுத்த இது மிகவும் ஏற்றது. தானியங்கி செயல்பாடு கொண்டது. இதன் எடை 5 கிலோ மட்டுமே. கருப்பு நிறத்தில் வந்துள்ள இதன் விலை சுமார் ரூ.13,757.