< Back
தொழில்நுட்பம்
மெட்டாலிக்ஸ் ஸ்மார்ட் கடிகாரம்
தொழில்நுட்பம்

மெட்டாலிக்ஸ் ஸ்மார்ட் கடிகாரம்

தினத்தந்தி
|
28 Sept 2023 9:15 PM IST

நாய்ஸ் நிறுவனம் புதிதாக மெட்டாலிக்ஸ் என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் நாய்ஸ் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. அழகிய வட்ட வடிவிலான மெட்டாலிக்ஸ் என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புளூடூத் வி 5.3 இணைப்பு வசதி கொண்டது. இதில் 1.4 அங்குல ஹெச்.டி. திரை உள்ளது. இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தூக்கக் குறைபாடு, மன அழுத்தம் உள்ளிட்டவற்றையும் துல்லியமாகக் காட்டும். இதில் உள்ள பேட்டரி 7 நாட்கள் வரை செயல்படும். சில்வர், கருப்பு நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.2,499.

மேலும் செய்திகள்