< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
மி.வி. வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்
|2 Aug 2023 12:14 PM IST
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் மி.வி. நிறுவனம் புதிதாக டியோபாட்ஸ் கே-6 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. பெபிள் வடிவில் மிக அழகிய வடிவமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
தட்டையான இயர்பட்கள், காதினுள் கச்சிதமாகப் பொருந்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. கோள வடிவிலான மாத்திரையைப் போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து 50 மணி நேரம் செயல்படும் வகையில் இதில் உள்ள பேட்டரியில் மின்சாரம் சேமிக்கப்படும். புளூடூத் இணைப்பு வசதி கொண்டது.
நீலம், கருப்பு, பச்சை, வெள்ளை நிறங்களில் வந்துள்ள இந்த இயர்போனின் விலை சுமார் ரூ.999.