< Back
தொழில்நுட்பம்
லூனார் கோமெட் ஸ்மார்ட் கடிகாரம்
தொழில்நுட்பம்

லூனார் கோமெட் ஸ்மார்ட் கடிகாரம்

தினத்தந்தி
|
5 Oct 2023 11:33 AM IST

போட் நிறுவனம் லூனார் கோமெட் என்ற பெயரில் கண்கவர் வண்ணங்களில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் லூனார் கோமெட் என்ற பெயரில் கண்கவர் வண்ணங்களில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.1.39 அங்குல அளவிலான வட்ட வடிவ திரையைக் கொண்டுள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது.

இதயத் துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, எஸ்.பி.ஓ 2, மகளிரின் மாதவிடாய் சுழற்சி உள்ளிட்ட உடல் நலன் சார்ந்த அறிவுறுத்தல்களை இது துல்லியமாகக் காட்டும். 100-க்கும் அதிகமான உடற்பயிற்சிகளில் எதில் ஈடுபட்டாலும், உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை இது துல்லியமாகக் காட்டும்.

கருப்பு, பர்ப்பிள், பச்சை, ஆரஞ்சு, கிரே உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.1,999 லிருந்து ஆரம்பமாகிறது.

மேலும் செய்திகள்