< Back
தொழில்நுட்பம்
லாயிட் டி.வி.
தொழில்நுட்பம்

லாயிட் டி.வி.

தினத்தந்தி
|
13 July 2023 11:30 AM IST

மின்னணு சாதனங் களை உற்பத்தி செய்யும் லாயிட் நிறுவனம் கியூலெட் திரையைக் கொண்ட ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. இது 43 அங்குலம், 50 அங்குலம், 55 அங்குல அளவுகளில் கிடைக்கும். டால்பி ஆடியோ தொழில்நுட்பம் உள்ளதால் இனிய இசையுடன் காட்சிகளைப் பார்த்து ரசிக்க முடியும்.

இதில் வெப் ஓ.எஸ். இயங்குதளம், உள்ளீடாக யூடியூப், நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளது. மேஜிக் ரிமோட் இத்துடன் வழங்கப்படுகிறது. 43 அங்குல மாடல் விலை சுமார் ரூ.29,999. 50 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.39,999. 55 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.44,990.

மேலும் செய்திகள்