< Back
தொழில்நுட்பம்
எல்.ஜி.யின் 4-கே எல்.இ.டி. டி.வி. அறிமுகம்
தொழில்நுட்பம்

எல்.ஜி.யின் 4-கே எல்.இ.டி. டி.வி. அறிமுகம்

தினத்தந்தி
|
26 July 2023 2:01 PM IST

வீட்டு உபயோக மின்னணுப் பொருட்களைத் தயாரிக்கும் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் மிகவும் மெலிதான 4-கே ரெசல்யூஷனைக் கொண்ட ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. 43 அங்குலம், 50 அங்குலம், 55 அங்குலம் மற்றும் 65 அங்குல அளவுகளில் இது கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு பிராசஸர் உள்ள 4-கே ரெசல்யூஷனில் காட்சிகள் துல்லியமாகத் தெரியும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இனிய இசையை வழங்க 20 வாட் ஆடியோ ஏ.ஐ. சவுண்ட் ப்ரோ, மேஜிக் ரிமோட் கண்ட்ரோல் வசதி கொண்டது.

43 அங்குல டி.வி.யின் விலை சுமார் ரூ.32,490. 50 அங்குல டி.வி.யின் விலை சுமார் ரூ.43,990. 55 அங்குல டி.வி.யின் விலை சுமார் ரூ.47,990. 65 அங்குல டி.வி.யின் விலை சுமார் ரூ.69,990.

மேலும் செய்திகள்