< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
வயர்லெஸ் ஸ்பீக்கர்
|1 Jun 2023 8:30 PM IST
ஜஸ்ட் கோர்ஸெகா நிறுவனம் எடுத்துச் செல்லும் வகையில் ஸ்பின்பன்னி என்ற பெயரில் வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.
இதனுடன் இணைப்பதற்கு மைக்ரோபோனும் உள்ளது. இது புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. ஸ்மார்ட்போனுடன் இணைத்துவிட்டால் இதன் மூலமே அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும். 5 வாட் ஸ்பீக்கர் மிகச் சிறப்பான இசையை வெளிப்படுத்த உதவுகிறது.
லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போனுடன் இணைத்து பாடல்களைக் கேட்டு மகிழலாம். மைக்ரோபோனில் ரீசார்ஜபிள் பேட்டரி (500 எம்.ஏ.ஹெச்.) உள்ளது. ஸ்பீக்கரில் 2,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
நீலம், வெள்ளை, இளம் சிவப்பு நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,999.