< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
ஜீரோபுக் 13 லேப்டாப் அறிமுகம்
|26 July 2023 1:51 PM IST
இன்பினிக்ஸ் நிறுவனம் இன்டெல் 13-வது தலைமுறையைச் சேர்ந்த ஜீரோபுக் 13 என்ற பெயரிலான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இது ஐ 5 பிராசஸரைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் 15.6 அங்குல திரை உள்ளது. இதில் 70 வாட் அவர் பேட்டரி உள்ளதால் விரைவாக சார்ஜ் ஆகும். அத்துடன் சி டைப் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
16 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. ரேம் உடையது. இதை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ள முடியும். விரல் ரேகை உணர் சென்சார் வசதியையும் கொண்டுள்ளது. 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் ஆகிய வசதிகளைக் கொண்ட இந்த மாடலின் விலை சுமார் ரூ.51,990.