சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 அறிமுகம்
|சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி வரிசையில் புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. `கேலக்ஸி வாட்ச் 6' என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது. 1.3 அங்குல அமோலெட் திரை, மெல்லியதான வடிவமைப்பு, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், வயர்லெஸ் முறையில் சார்ஜ் ஆகும் வசதி ஆகியவை இதில் உள்ளது.
தனிப்பட்ட உடல் நலன் குறிப்புகள், தூங்கும் நேரம், எழுந்திருக்கும் நேரம், தூக்க சுழற்சி, உடலியல் திறன் மற்றும் மூளை செயல்பாடு மீட்சி உள்ளிட்ட அம்சங்களை இது கணக்கீடு செய்யும். தூக்கம் வரவழைக்க செய்ய வேண்டிய சில குறிப்புகளையும் இது வழங்கும். ரத்த அழுத்தம், எலெக்ட்ரோ கார்டியோ கிராம் மூலம் இதய துடிப்பை கண்காணிக்கும். இதய துடிப்பில் மாறுபாடு ஏற்படும்போது அது குறித்து எச்சரிக்கை அளிக்கும்.
2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகம் கொண்ட இது கிராபைட், சில்வர், கருப்பு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.24,500 முதல் ஆரம்பமாகிறது.