< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
பீனிக்ஸ் அமோலெட் அல்ட்ரா ஏஸ் அறிமுகம்
|13 Sept 2023 3:43 PM IST
பயர்போல்ட் நிறுவனம் புதிதாக பீனிக்ஸ் அமோலெட் அல்ட்ரா ஏஸ் என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் கடிகாரம் வட்ட வடிவிலான டயலைக் கொண்டவை. உலோக ஸ்டிராப்புடன் பல்வேறு அழகிய வண்ணங்களில் வந்துள்ளது. 1.43 அங்குல திரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் உள்ளீடாக மைக்ரோபோன், ஸ்பீக்கர் ஆகியன உள்ளன. குரல் வழிக் கட்டுப்பாட்டிலும் செயல்படும். தூக்கக் குறைபாடு, ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவு, மகளிரின் மாதவிடாய் சுழற்சி உள்ளிட்ட உடலியல் சார்ந்த செயல்பாடுகளைத் துல்லியமாக உணர்த்தும்.
சில்வர், தங்கம், கருப்பு நிறங்களில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.2,499.