< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
புதிய சோனி ஸ்பீக்கர் அறிமுகம்
|2 Aug 2023 12:08 PM IST
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சோனி நிறுவனம் இசை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக அமைய எஸ்.ஆர்.எஸ். எக்ஸ்.வி 800 என்ற பெயரில் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் தெளிவான முன்புறம் மற்றும் பின்புறம் ஆடியோவுக்கான 5 டுவீட்டர்கள், ஸ்பீக்கரைச் சுற்றிலும் அழகிய விளக்கொளி உள்ளன.
இதில் உள்ள பேட்டரி 25 மணி நேரம் செயல்பட உதவுகிறது. வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்ல வசதியாக இதில் கைப்பிடியும், கீழ்ப் பகுதியில் சக்கரமும் உள்ளது. இந்த ஸ்பீக்கர் நீர் புகாத தன்மை கொண்டது. இதன் விலை சுமார் ரூ.64,990.