< Back
தொழில்நுட்பம்
லாஜிடெக் எம் 240 மவுஸ் அறிமுகம்
தொழில்நுட்பம்

லாஜிடெக் எம் 240 மவுஸ் அறிமுகம்

தினத்தந்தி
|
5 July 2023 1:05 PM IST

கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு உதிரிபாகங்களைத் தயாரிக்கும் லாஜிடெக் நிறுவனம் புதிதாக எம் 240 என்ற பெயரிலான புளூடூத் இணைப்பில் செயல்படும் வயர்லெஸ் மவுஸை அறிமுகம் செய்துள்ளது.

கம்ப்யூட்டர் மற்றும் டேப்லெட்டுடன் இணைத்து இதை உபயோகிக்கலாம். 33 அடி தூரம் வரை இதன் இணைப்பு செயல்படும் திறன் கொண்டது. பல்வேறு வண்ணங் களில் (கிராபைட், ரோஸ், வெள்ளை) வந்துள்ள இந்த மவுஸ் பயணத் தின்போது எடுத்துச் செல்ல ஏதுவானது.

இதில் உள்ள பேட்டரி 18 மாதங்கள் வரை செயல்படும். இடது கை பழக்கம் உள்ளவர்களும் எளிதில் கையாளும் வகையிலான வடிவமைப்பை இது கொண்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,595.

மேலும் செய்திகள்