< Back
தொழில்நுட்பம்
ஜியோ புக் 4-ஜி லேப்டாப் அறிமுகம்
தொழில்நுட்பம்

ஜியோ புக் 4-ஜி லேப்டாப் அறிமுகம்

தினத்தந்தி
|
9 Aug 2023 1:53 PM IST

ஜியோ புக் 4-ஜி லேப்டாப்

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் ஜியோபுக் என்ற பெயரிலான புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் ஜியோ இயங்குதளத்தை (ஜியோ ஓ.எஸ்.) கொண்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள், கோடிங் மற்றும் புதிய தொழில் முனைவுகளான யோகா ஸ்டூடியோ, ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 2 கிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட ஆக்டாகோர் பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் உள்ள இதன் நினைவகத் திறனை 256 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். இதில் உள்ள கீ போர்டில் 75-க்கும் மேற்பட்ட குறுக்கு வழிமுறைகள் உள்ளன. இந்த லேப்டாப்பில் 11.6 அங்குல திரை, ஹெச்.டி. டிஸ்பிளே உள்ளது. இதில் உள்ள பேட்டரி தொடர்ந்து 8 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. நீல நிறத்தில் வந்துள்ள இந்த லேப்டாப்பின் விலை சுமார் ரூ.16,499.

மேலும் செய்திகள்