< Back
தொழில்நுட்பம்
இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 3 லேப்டாப் அறிமுகம்
தொழில்நுட்பம்

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 3 லேப்டாப் அறிமுகம்

தினத்தந்தி
|
30 Aug 2023 12:57 PM IST

இன்பினிக்ஸ் நிறுவனம் மிகவும் மெல்லியதான அதிக செயல்திறன் கொண்ட லேப்டாப்பை இன்புக் எக்ஸ் 3 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 12-வது தலைமுறையைச் சேர்ந்த இன்டெல்கோர் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 14 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டது. இவற்றில் ஐ 3, ஐ 5, ஐ 6 மற்றும் ஐ 7 பிராசஸர்கள் உள்ளன.

அலுமினியம் அலாய் உலோக மேல்பாகத்தைக் கொண்டிருப்பதால் இது உறுதியாக இருக்கும். ஹெச்.டி. கேமரா மற்றும் விளக்கொளியுடன் கூடிய கீபோர்டு வசதி கொண்டது. இரண்டு ஸ்பீக்கர்கள் மூலம் டி.டி.எஸ். இசையைக் கேட்டு மகிழலாம். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 10 மணி நேரம் செயல்படும் இது, டைப் சி சார்ஜிங் வசதி கொண்டது.

சிவப்பு, பச்சை, கிரே, கருப்பு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.33,900 முதல் ஆரம்பமாகிறது.

மேலும் செய்திகள்