< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
டைசன் வி 12 வாக்குவம் கிளீனர் அறிமுகம்
|16 Aug 2023 5:11 PM IST
வீட்டு உபயோக மின் சாதனங்களைத் தயாரிக்கும் டைசன் நிறுவனம் வி 12 என்ற பெயரிலான வாக்குவம் கிளீனரை அறிமுகம் செய்துள்ளது. மெல்லியதான அதிக திறன் கொண்டதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. மின்சார வயர் இணைப்பு இல்லாமல் (வயர்லெஸ்) செயல்படக் கூடியது.
உலர் தரை மற்றும் ஈரமான தரைப்பரப்பு களை சுத்தம் செய்யும் திறன் கொண்டது. இதன் முனைப்பகுதியில் ஈரமான துணிப் பகுதி உள்ளதால் இது தரையை தண்ணீர் விட்டு துடைத்து சுத்தப்படுத்த உதவும். தண்ணீருக்கென தனி டேங்க் வசதி உள்ளது.
இதில் 300 மி.லி. தண்ணீரை ஊற்றி தரையை சுத்தம் செய்ய முடியும். இதன் விலை சுமார் ரூ.62,900.