< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
அமேஸ்பிட் பாப் 3 எஸ் ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்
|29 Jun 2023 1:39 PM IST
அமேஸ்பிட் நிறுவனம் பாப் 3 எஸ் என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 1.96அங்குல ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது.
100 விதமான விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டாலும், உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை வெளிப்படுத்தும். தொடர்ந்து 12 நாட்கள் செயல்படும் வகையிலான பேட்டரி, புளூடூத் 5.2 இணைப்பு, உள்ளீடாக மைக்ரோபோன், ஸ்பீக்கர் வசதி கொண்டது. இதயதுடிப்பு, மன உளைச்சல் உள்ளிட்டவற்றை துல்லியமாக அளவீடு செய்து அறிவுறுத்தும். இதன் விலை சுமார் ரூ.3,499.