< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
இன்பினிக்ஸ் கியூலெட் டி.வி. அறிமுகம்
|26 July 2023 1:58 PM IST
இன்பினிக்ஸ் நிறுவனம் கியூலெட் திரையைக் கொண்ட ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த டி.வி.க்கள் 32 அங்குலம் மற்றும் 43 அங்குல அளவுகளில் வந்துள்ளன. இதில் குவாட்கோர் பிராசஸர், 20 வாட் டால்பி ஆடியோ ஸ்பீக்கர்கள் பயன் படுத்தப்பட்டுள்ளது. 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. நினைவகம் கொண்ட இது மேஜிக் ரிமோட் மற்றும் குரல்வழி கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 32 அங்குல டி.வி.யின் விலை சுமார் ரூ.10,999. 43 அங்குல டி.வி.யின் விலை சுமார் ரூ.20,999.