< Back
தொழில்நுட்பம்
ஹெச்.பி. என்.வி. எக்ஸ் 360 லேப்டாப்
தொழில்நுட்பம்

ஹெச்.பி. என்.வி. எக்ஸ் 360 லேப்டாப்

தினத்தந்தி
|
19 July 2023 4:12 PM IST

ஹியூலெட் பக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம் புதிதாக என்.வி 360 என்ற பெயரிலான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. 15.6 அங்குல ஓலெட் தொடு திரை வசதி கொண்டது. 13-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 7 பிராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீடியோ கேம் பிரியர் களுக்கென இதில் நிவிட்யா ஜி இ-போர்ஸ் ஆர்.டி.எக்ஸ் 3050 மற்றும் எ.எம்.டி. ரேடியோன் கிராபிக் கார்டு உள்ளது. 8 ஜி.பி. மற்றும் 16 ஜி.பி. ரேம் மற்றும் 1 டி.பி. நினைவகத் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 மெகா பிக்ஸெல் கேமரா இதில் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.89,999.

மேலும் செய்திகள்