< Back
தொழில்நுட்பம்
ஹேய்ர் சூப்பர் டிரம் சலவை இயந்திரம்
தொழில்நுட்பம்

ஹேய்ர் சூப்பர் டிரம் சலவை இயந்திரம்

தினத்தந்தி
|
21 Sept 2023 2:34 PM IST

ஹேய்ர் நிறுவனம் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் இந்தியாவிலேயே இந்தியர்களுக்கென பிரத்யேக சலவை இயந்திரங்களைத் தயாரிக்கிறது. தற்போது முன்புறம் துணிகளைப் போடும் சலவை இயந்திரத்தை 525 எம்.எம். சூப்பர் டிரம் என்ற வரிசையில் இது அறிமுகம் செய்துள்ளது.

செயற்கை தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கக் கூடியது. இதனால் துணிகளுக்கு மிகச் சிறந்த சலவை மற்றும் துணிகளுக்கு பாதுகாப்பான சலவை அளிக்கக் கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.56,990. இதுவரை சந்தையில் விற்பனையாகும் சலவை இயந்திரங்களைக் காட்டிலும் இது அதிகபட்ச இடவசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் துணிகளை பாதுகாப்பாக துவைக்கும்.

இதில் டி.எம்.எம். தொழில்நுட்பம் உள்ளதால் இயந்திரம் செயல்படும்போது அதிர்வுகள் மற்றும் இரைச்சல் இருக்காது. அதிக இடவசதி தேவைப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதை உங்களுக்கு வசதியான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். இதில் 9 கிலோ வரை துணிகளைத் துவைக்க முடியும்.

மேலும் செய்திகள்