< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
ஹேய்ர் நவீன சலவை இயந்திரம்
|26 Oct 2023 3:43 PM IST
ஹேய்ர் நிறுவனம் துணிகளைத் துவைப்பதற்குத் தேவையான சலவை இயந்திரத்தை (வாஷிங் மெஷின்) 306 சீரிஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹேய்ர் நிறுவனம் துணிகளைத் துவைப்பதற்குத் தேவையான சலவை இயந்திரத்தை (வாஷிங் மெஷின்) 306 சீரிஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. தூய காற்று துணி துவைக்கும்போது உள்ளே செல்லும் வகையிலான நுட்பம் உள்ளது. இதனால் துணிகள் துவைத்த பிறகு புதிய ஆடை போல பளிச்சிடும். இதன் விலை சுமார் ரூ.21,900 முதல் ஆரம்பமாகிறது.
அல்ட்ரா பிரெஷ் ஏர் என்ற நுட்பம் உள்ளதால், துணிகளின் மீது கெட்ட நெடி வீசுவது தவிர்க்கப்படும். நுண்கிருமிகளான பாக்டீரியா போன்றவை சலவை இயந்திரத்தில் படியாமல் தவிர்க்கும். இதில் உள்ள துணி துவைக்கும் பகுதி மிகவும் பாதுகாப்பானது. இதனால் துணிகள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும்.