< Back
தொழில்நுட்பம்
பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்
தொழில்நுட்பம்

பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்

தினத்தந்தி
|
19 July 2023 4:14 PM IST

இன்பேஸ் நிறுவனம் புதிதாக பூம்பாக்ஸ் வயர்லெஸ் ஸ்பீக்கர், மைக்ரோபோனை அறிமுகம் செய்துள்ளது. பேசுபவரது குரல் உயர் தரத்தில் வெளிப்படுத்தும் வகையில் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் உள்ளது. இதற்கேற்ப 3 நிலை (மோட்) செயல்பாட்டு வசதி இதில் உள்ளது. இதை சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். டைப் சி சார்ஜிங் வசதி கொண்டது. இதனால் பவர் பேங்க் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றில் இணைத்தும் சார்ஜ் செய்ய முடியும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.2,299.

மேலும் செய்திகள்