< Back
தொழில்நுட்பம்
பிளாபுங்க்ட் ஸ்மார்ட் டி.வி.
தொழில்நுட்பம்

பிளாபுங்க்ட் ஸ்மார்ட் டி.வி.

தினத்தந்தி
|
12 Oct 2023 2:28 PM IST

பிளாபுங்க்ட் நிறுவனம் புதிதாக கியூலெட் திரையைக் கொண்ட 43 அங்குல டி.வி.யையும், 55 அங்குலத்தில் 4-கே ரெசல்யூஷன் டி.வி.யையும் அறிமுகம் செய்துள்ளது.

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் பிளாபுங்க்ட் நிறுவனம் புதிதாக கியூலெட் திரையைக் கொண்ட 43 அங்குல டி.வி.யையும், 55 அங்குலத்தில் 4-கே ரெசல்யூஷன் டி.வி.யையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் இனிய இசையை வழங்க 50 வாட் திறன் கொண்ட டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன. புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. கூகுள் அசிஸ்டென்ட் ரிமோட் வசதி உள்ளது. மீடியாடெக் எம்.டி 9602 குவாட் கோர் பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைகம் கொண்டது. உள்ளீடாக கூகுள் குரோம் காஸ்ட் உள்ளது. இந்த மாடலின் விலை சுமார் ரூ.28,999. இதில் அடுத்த மாடல் 55 அங்குல திரையைக் கொண்டது. இதில் 60 வாட் ஸ்பீக்கர் கள் உள்ளன. 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.34,999.

மேலும் செய்திகள்