< Back
தொழில்நுட்பம்
இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் விற்பனை இன்று தொடக்கம் - ஆப்பிள் விற்பனை மையங்களில் குவிந்த வாடிக்கையாளர்கள்
தொழில்நுட்பம்

இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் விற்பனை இன்று தொடக்கம் - ஆப்பிள் விற்பனை மையங்களில் குவிந்த வாடிக்கையாளர்கள்

தினத்தந்தி
|
20 Sept 2024 9:50 AM IST

இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.

டெல்லி,

உலகின் மிகவும் பிரபலமான ஐபோன் தயாரிப்பு நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனம் ஆண்டுதோறும் புதிய வகை செல்போன் மாடல்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ் போன்களை ஆப்பிள் நிறுவனம் கடந்த 9ம் தேதி அறிமுகப்படுத்தியது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட ஐபோன் 16 சீரிசில் மொத்தம் 4 மாடல்கள் உள்ளன.

இந்நிலையில், ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 புரோ, ஐபோன் 16 புரோ மேக்ஸ் ஆகிய ஐபோன் 16 சீரிஸ் போன்கள் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளன. இதையடுத்து, ஐபோன் 16 சீரிஸ் போன்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லி, மும்பையில் உள்ள ஐபோன் விற்பனை மையங்களில் அதிகாலை முதல் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

மேலும் செய்திகள்