< Back
தொழில்நுட்பம்
ஏசர் ஆஸ்பயர் 5 லேப்டாப்
தொழில்நுட்பம்

ஏசர் ஆஸ்பயர் 5 லேப்டாப்

தினத்தந்தி
|
8 Jun 2023 4:07 PM GMT

கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஏசர் நிறுவனம் புதிதாக ஆஸ்பயர் 5 என்ற பெயரிலான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.

14 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டது. இதில் இன்டெல் கோர் 5 பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. நிவிட்யா கிராபிக் கார்டு கொண்டது. 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் உடையது.

இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. வை-பை, புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. 50 வாட் அவர் பேட்டரி 65 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. விண்டோஸ் 11 இயங்குதளம் உடையது. கிரே வண்ணத்தில் வந்துள்ள இந்த மாடல் விலை சுமார் ரூ.78,788.

மேலும் செய்திகள்