< Back
தமிழ் மாத ராசிபலன்
தமிழ் மாத ராசிபலன்
திருப்பூர் அருகே சோகம்: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
|18 Dec 2024 4:47 AM IST
திருப்பூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் கோல்டன்நகர் அருகே கருணாகரபுரியை சேர்ந்தவர் செல்லமுருகன். இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் மாணவி, அவரது அறையை விட்டு வராததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அறைக் கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி பிணமாக கிடந்தாள். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.