< Back
மாநில செய்திகள்
கடலூர் - சிதம்பரம் செல்லக்கூடிய தனியார் பஸ்கள் இன்று இயங்காது

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கடலூர் - சிதம்பரம் செல்லக்கூடிய தனியார் பஸ்கள் இன்று இயங்காது

தினத்தந்தி
|
23 Dec 2024 7:57 AM IST

புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று போராட்டம் நடத்துகிறது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் கொத்தட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. இதனால் கடலூர் - சிதம்பரம் செல்லக்கூடிய தனியார் பஸ்கள் இன்று இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் முழுவதும் பணி முடிவடையாத நிலையில் கடலூர் அருகே உள்ள பூண்டியாங்குப்பம் கிராமத்திலிருந்து சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலைக்கு சுங்கவரி வசூலிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் டோல் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் 60 கி.மீ ஒரு டோல்கேட் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. மேலும் முழுமையாக விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நெடுஞ்சாலை பணிகள் முடிந்தவுடன் தான் சுங்கக் கட்டண வசூல் துவக்கப்பட வேண்டும் என்றும், 20 கி.மீட்டருக்கும் குறைவான தூரம் செல்பவர்களுக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தனியார் பஸ்கள் மற்றும் லாரிகளுக்கு விதித்துள்ள அதிகபட்ச கட்டணத்தைக் குறைத்திட வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்