< Back
தமிழ் மாத ராசிபலன்
மேற்குத்தொடர்ச்சி மலையில் மீண்டும் காட்டுத்தீ
தேனி
தமிழ் மாத ராசிபலன்

மேற்குத்தொடர்ச்சி மலையில் மீண்டும் காட்டுத்தீ

தினத்தந்தி
|
17 Feb 2025 8:19 PM IST

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் டி.சுப்புலாபுரம் நாழிமலை பகுதிகளில் நேற்று மாலை முதல் 7 இடங்களில் காட்டுத்தீ பரவியது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி, 7 இடங்களில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தற்போது 2 இடங்களில் தீயானது பரவி வரும் நிலையில், தீயை அணைக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்