பவர் ஸ்டீரிங்
|எலக்ட்ரானிக் பவர் ஸ்டீரிங் பயன்படுத்தும் கார்களில் அதைப் பராமரிக்க அதிக செலவுகள் ஏற்படுவதில்லை.
தற்போதுள்ள பெரும்பாலான கார்களில் எலக்ட்ரானிக் பவர் ஸ்டீரிங் (இ.பி.எஸ். சிஸ்டம்) முக்கிய பங்கு வகிக்கிறது. வாகன ஓட்டிகள் சுலபமாக இடது மற்றும் வலது புறம் கடினமில்லாமல் வாகனம் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நன்மைகள் ஏராளம்.
ஹைட்ராலிக் பவர் ஸ்டீரிங் என்பது என்ஜினின் சக்தி மூலம் இயங்குகிறது. ஆனால் எலக்ட்ரானிக் பவர் ஸ்டீரிங் மோட்டார் மூலம் இயங்குவதால் என்ஜினுக்கு பாரம் குறைந்து அதிக மைலேஜ் கிடைக்க வகை செய்கிறது.
எலக்ட்ரானிக் பவர் ஸ்டீரிங் பயன்படுத்தும் கார்களில் அதைப் பராமரிக்க அதிக செலவுகள் ஏற்படுவதில்லை. அதனால் நமக்கு பண விரயம் அதிகமாக வாய்ப்பு இல்லை. முறையாக பராமரிப்பு செய்தால் அதிக நாட்கள் வரை பழுது ஏதும் ஏற்படாமல் நன்றாக செயல்படும் சாதனமாக இருக்கும். இதில் சில தீமைகளும் இருப்பதாக கூறுகிறார்கள். எலக்ட்ரானிக் பவர் ஸ்டீரிங் உள்ள கார்களில் பேட்டரி வோல்டேஜ், 12 வோல்டுக்குக் கீழ் குறையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எலக்ட்ரானிக் சிஸ்டத்தில் தண்ணீர் பட்டுவிட்டால் அதை சரிசெய்வது மிகவும் கடினம். பின்பு புதிதாக மாற்றும் சூழ்நிலை ஏற்படும்.
எலக்ட்ரானிக் பவர் சிஸ்டம் உள்ள கார்களில் ஸ்டீரிங் பகுதியைக் கழற்றும் போது முறையாக கழற்றாமல் சுத்தியால் அடித்தோ அல்லது வேறு வழிகளில் கழற்றினால் இதில் உள்ள சென்சார் உணர் கருவி பழுதாகி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.