< Back
ஞாயிறுமலர்
ஹைட்ரஜனில் இயங்கும் பேருந்து
ஞாயிறுமலர்

ஹைட்ரஜனில் இயங்கும் பேருந்து

தினத்தந்தி
|
12 Oct 2023 6:02 PM IST

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நாட்டிலேயே முதல் முதலாக ‘கிரீன் ஹைட்ரஜனில்’ இயங்கும் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நாட்டிலேயே முதல் முதலாக 'கிரீன் ஹைட்ரஜனில்' இயங்கும் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

30 கிலோ கொள்ளளவு கொண்ட நான்கு சிலிண்டர்கள் மூலம் 350 கி.மீ. தூரம் வரை பேருந்துகளை இயக்க முடியும். முக்கியமான விஷயம் என்னவென்றால், ஹைட்ரஜன் எரிக்கப்படும்போது நீராவியை மட்டுமே வெளியிடுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு அடைவது தடுக்கப்படும்.

மேலும் செய்திகள்