< Back
ஞாயிறுமலர்
ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கும் பழங்கள்
ஞாயிறுமலர்

ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கும் பழங்கள்

தினத்தந்தி
|
7 April 2023 8:15 PM IST

ரத்தத்தில் காணப்படும் கொழுப்புப் பொருள், கொலஸ்ட்ரால். இதன் அளவு அதிகரித்தால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டுவிடும். அதனால் இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்து விடும்.

எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது ரத்தத்தில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். அத்தகைய பழங்கள் பற்றி பார்ப்போம்.

பேரிக்காய்

இதில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. எல்.டி.எல். எனப்படும் அடர்த்தி குறைந்த கொழுப்பு புரதத்தின் அளவை குறைக்கக்கூடியது. கெட்ட கொலஸ்ட்ரால் என அழைக்கப்படும் இதுதான் உடலில் பெரும்பாலான கொழுப்பை உருவாக்குகிறது.

உடலில் எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிக அளவு இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடும். பேரிக்காயை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

ஆரஞ்சு:

ஆரஞ்சு பழங்களில் பைட்டோஸ்டெரால்ஸ் என்ற பொருள் உள்ளது. இது குடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதை தடுக்கும் ஒரு வகை கொழுப்பு பொருளாகும். ஆரஞ்சு பழங்கள் சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம்.

ஆப்ரிகாட்ஸ்

ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீராக பராமரிப்பதற்கு ஆப்ரிகாட்ஸ் பழங்கள் உதவும் என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஸ்ட்ராபெர்ரி:

இந்த பழத்தில் ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பை குறைக்கக்கூடியவை.

மாம்பழம்:

மாம்பழங்களை தொடர்ந்து உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆப்பிள்:

ஆப்பிளில் பாலிபினால்கள், நார்ச்சத்து மற்றும் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன. இவை அனைத்தும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிற உணவுகள்:

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் பழங்கள் மட்டுமின்றி காய்கறிகளையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன், வெண்ணெய், நட்ஸ் வகைகள், ஆலிவ் பழங்கள், அவற்றின் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை உள்ளடக்கிய உணவு பொருட்களை மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.

மேலும் செய்திகள்