பூமி முதல் புளூட்டோ வரை: கிரகங்களின் `பயோடேட்டா'
|சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாக விளங்குகிறது. இந்த கோளை சுற்றி காணப்படும் வளையங்கள் பெரும்பாலும் பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியில் தண்ணீர் இருக்கிறதா? என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
பூமி:
உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த சூழலை கொண்ட ஒரே கிரகமாக பூமி விளங்குகிறது. அதற்கேற்ப கடல்கள், இயற்கை சமவெளிகள், பாலைவனங்கள், பனிக்கட்டிகள், எரிமலைகள், அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கக்கூடிய வளிமண்டலம் என பலதரப்பட்ட சூழலைக் கொண்டுள்ளது.
சூரிய குடும்பத்தில் திரவ மேற்பரப்பு கொண்ட ஒரே கோளாகவும் திகழ்கிறது. பூமியின் மேற்பரப்பில் 70.8 சதவீதம் கடல் நீர்தான் சூழ்ந்திருக்கிறது. 29.2 சதவீதம்தான் நிலப்பரப்பாக உள்ளது.
புளூட்டோ:
ஒரு காலத்தில் ஒன்பதாவது கோளாக கருதப்பட்ட புளூட்டோ, தற்போது குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புளூட்டோவும் பாறைகள் மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது.
சூரியன், சந்திரன், செவ்வாய் என கிரகங்களை நோக்கி ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு கிரகங்களின் தன்மைகள், அங்கு நிலவும் காலநிலை, அவற்றின் குணாதிசயங்கள் பற்றி பார்ப்போம்.
புதன்:
இது சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோளாகும். சூரிய குடும்பத்தில் சிறிய கோளாகவும் உள்ளது. சூரியனுக்கு அருகில் இருப்பதால் புதனின் மேற்பரப்பில் சூரிய ஒளியின் தாக்கம் மற்ற கோள்களை விட அதிகமாகவே இருக்கும். மேலும் சூரிய வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு வளிமண்டலம் இல்லாததால் மற்ற கோள்களையும் விட புதனில் நிலவும் வெப்பநிலையில் கடுமையான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். அதனால் இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமில்லாத நிலை நிலவுகிறது.
செவ்வாய்:
புதனுக்கு அடுத்தபடியாக சிறிய கோளாக அறியப்படுகிறது. செவ்வாயின் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு காணப்படுகிறது. அதனால் செவ்வாய் கிரகம் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. பூமியில் அமைந்திருப்பது போன்றே எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகள் காணப்படுகின்றன.
பூமியைப் போலவே இங்கும் பருவ மாற்றங்கள் நிகழ்கின்றன. செவ்வாயின் மேற்பரப்பில் நீர் இருந்திருக்கக்கூடும் என்பது விண்வெளி ஆய்வுகளின் மூலம் தெரியவந்தது. அத்துடன் இதன் வட துருவத்தில் மிகப்பெரிய பனிப்பள்ளம், பனிப்பாறைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் காற்று மண்டலம் மிகவும் மெல்லியது. பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. இங்கு மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியமான சூழல் நிலவுமா? என்பது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
யுரேனஸ்:
இதுவும் வாயு கிரகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தால் ஆனது. வளிமண்டத்தில் மீத்தேனும் அதிகம் சூழ்ந்திருக்கும். இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு. மற்ற கோள்கள் ஓரளவுக்கு செங்குத்து நிலையில் சுழன்று கொண்டிருக்க இந்த கோள் மட்டும் படுக்கை நிலையில் சுழலும் தன்மை கொண்டது.
வெள்ளி:
சூரியனில் இருந்து புதனுக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக அமைந்துள்ள கோளாகும். நிலவுக்கு அடுத்து ஒளி மிகுந்த கோளாகவும் வெள்ளி விளங்குகிறது. பூமிக்கு அருகில் இருப்பதால் பூமியின் சகோதரி கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதுவும் சூரியக் குடும்பத்தில் மிகவும் வெப்பமான, நச்சுத்தன்மை கொண்ட வாயுக்களால் ஆன வளிமண்டலத்தைக் கொண்ட கோளாக விளங்குகிறது. இதன் மேற்பரப்பு பெரும்பாலும் மேகங்களால் மூடப்பட்டிருக்கும். அதனால் உயிரினங்கள் வாழ முடியாத சூழலை கொண்டுள்ளது.
வியாழன்:
இது சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக விளங்குகிறது. பூமியுடன் ஒப்பிடும்போது இங்கு இருப்பது போல் பாறை அடுக்குகள், மண், கனிமங்கள் இருக்காது. சூரியனின் உள்ளே இருப்பதுபோல ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களே மிகுந்திருக்கும். அதனால் வாயு கிரகமாக அறியப்படுகிறது.
இந்த கிரகத்தில் திடமான மேற்பரப்பு இல்லை. வளிமண்டலத்தில் மஞ்சள், சிவப்பு, பழுப்பு நிற மேகங்கள் சூழ்ந்திருக்கும். வியாழனின் வளிமண்டலத்தில் மணிக்கு 432 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். சூரிய குடும்பத்தில் இதுதான் அதிவேகத்தில் சுழலும் கிரகமாகும். இங்கு நிலவும் தட்ப வெப்பமும் மிக அதிகம். அதனால் இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியம் இல்லை.
நெப்டியூன்:
வாயு கிரகமான இது சூரியனில் இருந்து மிக தொலைவில் அமைந்துள்ளது. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் இதனை சூழ்ந்திருக்கும். நீற நிறம் கொண்ட இது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது மிக மங்கலாக காட்சி அளிக்கும். இதனால் வெறும் கண்களால் இதை காண முடிவதில்லை.
சனி:
இதுவும் மற்றொரு வாயு கிரகமாகும். வியாழனைப் போலவே பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களை கொண்டது. இந்த கிரகத்திலும் திடமான மேற்பரப்பு இல்லை.