சருமத்திற்கு பலம் சேர்க்கும் பானங்கள்
|தண்ணீர் நிறைய பருகுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அதுபோல் சில பானங்களும் சரும நலனை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை சரும குறைபாடுகளை போக்கி பொலிவான தோற்றத்திற்கு வித்திடக்கூடியவை.
தண்ணீர் பருகுவது போல் இந்த பானங்களையும் அவ்வப்போது பருகுவது சருமத்திற்கு பலம் சேர்க்கும். தேவையற்ற சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளச் செய்யும். அத்தகைய சில பானங்கள் குறித்து பார்ப்போம்.
தக்காளி சாறு:
தக்காளி சாற்றில் லைகோபீன் நிறைந்துள்ளது. இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவி செய்யும்.
கற்றாழை சாறு:
கற்றாழை சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை வீக்கத்தைக் குறைக்கவும், மென்மையான சரும பொலிவை தக்க வைக்கவும் உதவும்.
இளநீர்:
இதில் எலெக்ட்ரோலைட்கள் உள்ளன. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும், சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவும்.
கிரீன் டீ:
இதில் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால் எந்தவித சேதமும் அடையாமல் சருமம் பாதுகாக்கப்படும்.
எலுமிச்சை ஜூஸ்:
உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதற்கு எலுமிச்சை ஜூஸ் உதவும். குறிப்பாக தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றும் பணியை துரிதமாக மேற்கொள்ளும்.
மாதுளை சாறு:
சருமத்தில் முன்கூட்டியே முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுப்பதில் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு. சருமம் சேதம் அடைவதை கட்டுப்படுத்தவும் செய்யும். அதனால் அடிக்கடி மாதுளை ஜூஸ் பருகுவது சருமத்திற்கும் நல்லது.
கேரட் ஜூஸ்:
இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு இந்த ஜூஸை அடிக்கடி பருகுவது அவசியம்.
பீட்ரூட் ஜூஸ்:
பீட்ரூட் ஜூஸில் ஆன்டிஆக்சிடென்டுகள் உள்ளன. அவை சரும பொலிவை மேம்படுத்தவும், சரும வீக்கத்தை குறைக்கவும் உதவும்.
இஞ்சி டீ:
இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை சருமம் சிவத்தல் மற்றும் வீக்கம் அடைதல் போன்ற பாதிப்புகளை குறைக்க உதவும்.